Thursday, August 31, 2006

திசைகள் செப்டம்பர் இதழில்

இந்த இதழில்

கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் அப்துல் ஜப்பார், திசைகளின் சென்னை சிறப்பிதழுக்காக, சிதம்பரம் ஸ்டேடியம் பற்றிய தன் நினைவுகளை சென்னையிலிருந்து பகிர்ந்து கொள்கிறார். திசைகளின் கௌரவ ஆசிரியர் மாலனின் சென்னை பற்றிய ஆராய்ச்சியை அவரது வலைப் பதிவிலிருந்து எடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. நியுஸிலாந்திலிருந்து துளசி கோபால் பழைய சினிமா பாட்டின் மூலம் நம்மை பின்னோக்கி அழைத்துச் செல்கிறார். சென்னையிலிருந்து பவித்ரா ஸ்ரீனிவாசன் கொஞ்சம் கொஞ்சமாக சென்னை தன்னை கவர்ந்ததை பகிர்ந்து கொள்கிறார். பத்மநாபன் மீண்டும் ஒரு பிறவி இருந்தால் சென்னையிலேயே பிறக்க வேண்டும் என்று வேண்டுகிற அளவு சென்னை வாழ்வை சிலாகிக்கையில், மும்பாயிலிருந்து ஸ்ரீனி, சென்னையில் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் என்று குறிப்பிட்டு சென்னை மேம்பட தன் யோசனைகளை முன் வைக்கிறார். இவர்களுடன் சிறுகதைகள் பகுதியில் சௌதி அரேபியாவிலிருந்து இப்னு ஹம்துன், சிங்கப்பூரிலிருந்து ஜெயந்தி சங்கர், சென்னையிலிருந்து சித்ரா ஷ்யாம், மற்றும் புஷ்பா கிறிஸ்ரி ஆகியோர் பங்கு கொள்கிறார்கள். கவிதைகள் அளிப்பது இராம. வயிரவன், இமையாள், சிலம்பூர் யுகா, செ ப பன்னீர்செல்வம் , மதுமை சிவசுப்ரமணியம், ராஜலஷ்மி ராஜரத்தினம், மற்றும் ஜெஸிலா ரியாஸ்.
அண்டை அயல் பகுதியில் சிங்கப்பூரிலிருந்து சௌந்திரநாயகி வைரவன் அங்கே சீனப் பெண்கள் பரத நாட்டியம் கற்றுக் கொள்வதைப் பற்றி எழுதுகிறார். செய்தியில் பிரமுகர்கள் பகுதியில் சமீபத்தில் கோலா பானங்கள் உலகில் பரபரப்பு ஏற்படுத்திய இரு இந்தியப் பெண்களைப் பற்றிய குறிப்புகள் வெளியாகின்றன. சர்ச்சை என்ற புதிய பகுதி இந்த இதழில் ஆரம்பம். தேசீய கீதம் வந்தே மாதரம் பற்றி சமீபத்தில் எழுந்த சர்ச்சையைப் பற்றி தன் கருத்தைக் கூறும் மாலன், அதன் சரித்திரப் பின்னணியை விளக்குகிறார். சென்னையிலிருந்து சுப்பிரபாரதி மணியன், பொதுவாக நீர் வளம் குறைந்து கொண்டு வருவதைப் பற்றியும் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தைப் பற்றியும் வாழ்க்கை பகுதியில் வலியுறுத்துகிறார். புத்தகம் பகுதியில் டாக்டர் நடேசனின் 'வாழும் சுவடுகள்' புத்தகத்தை அறிமுகப் படுத்துகிறார் லண்டனிலிருந்து இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.
வரும் அக்டோபர் மாத திசைகளின் சிறப்புப் பகுதி "திருமணம்". இதைப் பற்றிய தங்கள் கருத்துக்கள், விமரிசனங்கள், சந்தோஷங்கள், நம்பிக்கைகள், நம்பிக்கையின்மைகள், குமுறல்கள், ஆலோசனைகள், மற்றும் இதர சமூகங்களில் திருமண சடங்குகள் என்று பல கோணங்களில் கட்டுரைகள் வரவேற்கிறோம் - குறிப்பாக இளைய தலைமுறையினரிடமிருந்து !!
அன்புடன்

அருணா சீனிவாசன்

பின் குறிப்பு: வலைபதிவுகள் பற்றி பழக்கம் இல்லாதவர்களுக்கு திசைகளில் உள்ள படைப்புகளைப் பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே எழுத:

கீழே உள்ள Comments என்பதை கிளிக் செய்தால் திறக்கும் பெட்டியில் உங்கள் கருத்தை ஆங்கிலத்தில் எழுதலாம். அல்லது தமிழில் எழுதி யூனிகோடில் மாற்றி இங்கே பதியலாம். உங்கள் கடிதத்தின் கீழே உங்கள் பெயரை எழுதிவிட்டு, அடியில் இருக்கும் Anonymous பொத்தானை அழுத்திவிட்டு, பிறகு Login and Publish பொத்தானை அழுத்தி உங்கள் கடிதத்தை அனுப்பவும்.

6 Comments:

Anonymous Anonymous said...

hi rajilukshmi,
very nice. i liked it very much.
i m really happpy that my friend wrote a very good kavidhai.very nice.

10:23 PM  
Anonymous Anonymous said...

Ungal katturai padu swarasyam. Yathartham niramba. Innum konjam sorchikkanam irunthirukkalamo endru manathil oru siru iyam. Matrapadi vehu nandru.

Maalan averhaludaiya katturai "Arputham" engira vahai. sarithirathai pattiyalittu 'bore'
adikkaamal konjam karpanayai swayaha ilaiyodac-cheithu meruhetriyulla nayam,
ondralla pala sabashalai poda vaikiruthu.

Vanakkam.

Abdul Jabbar.

8:43 PM  
Blogger Jazeela said...

அ.ஜ. ஐயாவின் கட்டுரை அற்புதம். ஏற்கெனவே கேட்ட விஷயங்களென்றாலும் படிக்க சுவாரஸ்யமாகவே இருந்தது.
`

7:03 AM  
Anonymous Anonymous said...

நான் நேற்றைய திசைகள் பார்த்தேன். அருமையான கட்டுரைகள். அதிலும் பவித்ராவின் கட்டுரை ரொம்பவே அருமையாக இருந்தது. ஜெயந்தியின் கதை கிட்டதட்ட எதிர்நீச்சல் கதை போலவே இருந்ததாய் ஒரு தோற்றம். மாலனுடையதும் கூட. மாலனின் சமீபத்திய வலைப்பதிவும் நன்றாக இருந்தது.இலங்கையை பற்றியது. அருமையான அதேசமயம் உண்மையான கவிதைகள் உள்ளடக்கியது.

அன்புடன்
பத்மா

10:13 AM  
Anonymous Anonymous said...

Very good morning. Thisaigal is really nice , very informative, varthaigale illai intha ithalai varnikka. Muthan muthalai intha agapakkathirku vanthen. Manathai kollai konda thisaigalukku nantri. Unggal panigal thodara yen valthukkal.

Meendhum santhippom.

Mallika

9:57 PM  
Anonymous Anonymous said...

hello, my name is Dhandapani.i am a teacher. i am going to take a 12 days computer training in chennai.
chennai was not good .lot of pollusion so much of noise, over crowd in chennai busses.full of musquitoes we must change chennai.
T.Dhandapani

8:56 PM  

Post a Comment

<< Home