Monday, July 31, 2006

திசைகள் ஆகஸ்ட் இதழில்

திசைகள் ஆகஸ்ட் இதழில்

பங்கு பெறும் எழுத்தாளர்கள் :

தனிமனித சுதந்திரம் பற்றிய இந்த இதழில் தடைகளை வென்ற மனிதர்கள் நம்முடன் தம் அனுபங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

எழுத்தாளர் கிருஷ்ணாவின் தாயாரை நேர் காணல் காணுவது சென்னையிலிருந்து மதுமிதா.

லிவிங் ஸ்மைல் வித்யா சென்னையிலிருந்து தன் கட்டுரையின் மூலம் சமூகத்திற்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.

ஏழை விவசாயி குடும்பத்திலிருந்து முன்னுக்கு வந்த ஆறுமுகத்தை நமக்கு அறிமுகப்படுத்துவது கடலூர் நடேசன்.

இவர்களுடன் இன்னும் தனிமனித சுதந்திரம் பற்றி தங்கள் கருத்துக்களை முன் வைப்பவர்கள்,

அலாஸ்காவிலிருந்து தங்கமணி,

நியூஜெர்ஸியிலிருந்து தமிழ்சசி, மற்றும்

கல்கத்தாவிலிருந்து நிர்மலா.

சிறுகதைகள் பங்களிப்பு செய்திருப்பவர்கள், இங்கிலாந்திலிருந்து நிலா, சிங்கப்பூரிலிருந்து ரம்யா நாகேஸ்வரன் மற்றும் சென்னையிலிருந்து டி.எஸ்.பத்மநாபன்.

கவிதைகள் தருபவர்கள், பன்னீர்செல்வம், கவிநயா, ஜெஸீலா, கே. மாதங்கி, நாகு, ஸ்ரீனி, மற்றும் சிலம்பூர் யுகா.

அண்டை, அயல் பகுதியில் லிலியன் பார்டன் என்பவர், 2006, ஜூலை 24 ந் தேதியிட்ட நியூயார்க்கர் இதழில் தான் வாழ்ந்த நியூயார்க் பற்றி எழுதியதன் மொழிபெயர்ப்பு இடம் பெறுகிறது.

இணையத்தில் தமிழ் இந்த அளவு பிரமாதமாக பவனி வருவதற்கு உமர் தம்பியின் யூனிகோட் முயற்சிகள் ஒரு பெரும் காரணம். அவர் மறைந்தது தமிழ் கணினி வளர்ச்சிக்கு ஒரு பெரும் இழப்பு. அவருடனான தன் தொடர்புகளை நினைவு கூறுகிறார் சுரதா யாழ்வாணன்.

புத்தகம் பகுதியில் டாக்டர் என். நடேசன் எழுதிய ''வண்ணாத்திக்குளம்'' புத்தகம் பற்றி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்பவர் லண்டனிலிருந்து ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். சினிமாப் பகுதியில் சுப்பிரபாரதி மணியன்.

போதிமரத்தில் வினோபா பாவேவின் உரைகளிலிருந்து ஒரு துளி.

சிறந்த வாசிப்பு அனுபவத்தை இது உங்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களையும் விவாதங்களையும் "திசைகள் அரங்கில்" வரவேற்கிறோம்.

அன்புடன்

அருணா சீனிவாசன்.

7 Comments:

Blogger பூனைக்குட்டி said...

uNmaiyil varavERkiREn.

sila maathangkaL thisaigalukkaa 14 thEthi varai kaaththirunththa ninaivukaL uNdu.

Regards

1:11 PM  
Blogger புதுமை விரும்பி said...

இது தங்கமணியின் பதிவிற்காக எழுதப்பட்டது.

கீழை மற்றும் மேலை உலகத்து மனிதர்களின் (தனிமனித) விடுதலை பற்றிய அறியாமைக்கு அல்லது
விழிப்புணர்வுக்கு, மதங்களைக் காரணம் காட்டுவதை விட இரு இடங்களிலும் உள்ள சமூக கட்டமைப்பின்
அடிப்படையில் இந்த விஷயத்தை அனுகுவதே மிகச்சரி. மேலை நாடுகளில் 16 அல்லது 18 வயதில் கிடைக்கிற
சுதந்திரம் (பெற்றோர்களிடமிருந்தான விடுதலை) அவர்களின், பொறுப்புகள், கடமைகள், உரிமைகள் பற்றிய
அறிவைக் கொடுக்க போதுமானதாயிருக்கிறது. அவரவர்களின் உணவை அவர்களே தேட வேண்டியிருக்கிறது.
இரண்டு அல்லது மூண்று வருடங்களுக்கான கட்டாய சமூக அல்லது இராணுவ சேவை அங்குள்ள இளைஞர்களைப்
பொறுப்புள்ளவர்கள் ஆக்குகின்றன என்றால் அது மிகையாகாது. அதோடு, மேலை நாட்டு முறையின் குழந்தை வளர்ப்பு
முறையும், இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, குழந்தைகளின் மீதான வன்முறை சட்டத்தால்
மிகக்கடுமையாக கண்டிக்கப்படுகிறது. மேலும் தண்டிக்கப்படுகிறது. இந்திய சமூகத்தில் நிலைமை
இப்படியில்லை. எத்தனை வயதான போதும், மகன் அல்லது மகளை காப்பாற்றும் கடமை இன்னும் பேற்றோர் மீதே
படிந்து கிடக்கிறது. அது மட்டுமல்லாமல், பெற்றோரிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் குழந்தைகள்
மீதான வன்முறைகளுக்கு அளவேயில்லை. சிறுவயதில் ஆழப்படிந்து விடுகிற இந்த வன்முறை மீண்டும் நமது
பிள்ளைகளின் மீது வேர்பிடித்து வளர்கிறது. வன்முறைக்கு ஆழாக்கப்பட்டவர்களும், அதை தலைமுறை
தலைமுறையாய் நடத்திக்கொண்டிருப்பவர்களும் இருக்கும் சமுதாயத்தில், தனி நபர் விடுதலை, உரிமைகள்
பற்றிய எண்ணம் எப்படி வரும். அதனால், நமது சமூக கட்டமைப்பை சீர்திருத்தம் செய்தாலே
போதுமானது. நமது சமுதாயம் பொறுப்புள்ள, நாட்டின் அக்கறையில் விருப்பம் உள்ள ஒன்றாக மாறிவிடும்.
மதங்களால் சமூகம் பாதிக்கப்படுவது என்பது என்னால் நம்பமுடியாத விசயம். பெற்றோர்களைத் தாண்டி,
ஆசிரியர்களைத் தாண்டி, மனைவிகளைத் தாண்டி மற்றும் குழந்தைகளைத் தாண்டி தான் மதம் ஒரு
மனிதனை, பார்க்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலானோர் வாழ்க்கையில் அது கடைசி வாசலுக்கு வெளியே நின்று
மெலிந்த சத்தத்துடன் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரன் போலத்தான் இருக்கிறது. பாவம் மதங்கள்!
அவைகளை வம்புக்கிழுக்க வேண்டாமே!!

2:46 PM  
Blogger புதுமை விரும்பி said...

இந்த திசைகள் இதழில், தனி மனித உரிமைகள், சுதந்திரம் பற்றி எல்லோரும் பேசியிருந்தாலும், இதற்குள்
பதுங்கிக்கிடக்கிற இதன் கோர உருவத்தைப் பற்றியும் யாராவது கொஞ்சம் சொல்லியிருக்கலாம். இப்பொழுது
இருக்கிற சூழ் நிலையில் எந்த ஒரு ஆரோக்கியமான, அல்லது முன்னேற்றத்துக்கு எதிரான கருத்துக்கள்
வந்தாலும், அதை ஆதரிக்க அல்லது எதிர்க்க குழுக்கள்/அமைப்புகள் இருக்கின்றன. இது எந்த ஒரு கருத்துக்கும்
பொதுவானது. கருத்தைப் பொறுத்து, ஆதரவளிக்கிற அல்லது எதிர்க்கிறவர்களின் எண்ணிக்கை
வித்தியாசப்படுகிறதே தவிர இந்த இருபட்ட நிலைமையின் இருப்பு உண்மையானது. உரிமைகள் என்ற பேரில்,
எதிரணி போராட்டம் நடத்துவதும், உண்ணாவிரதம் இருப்பதும் இப்பொழுது மிகமிக சாதாரணமாகிவிட்ட ஒன்று.
ஒரு நடிகை சொன்ன கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் அளவிற்கு (ஒரு நாளைக்கு 24 மணி
நேரத்துக்கும் அதிகமாக) எக்கச்சக்க நேரம் படைத்த ஒரே சமூகம், நம் தமிழ் சமூகம் தான்
(சந்தோசப்படுவோமாக! தலை நிமிர்ந்து நிற்போமாக!!). இதனால், எல்லா முன்னேற்ற பணிகளும்
தடைபடுகின்றன. அல்லது தாமதப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், ஒரு அமைப்பின் தலைமையில்
இருந்துகொண்டு, புகழுக்காகவும், பத்திரிக்கைகளில் பெயர் வரவேண்டும் என்பதற்காகவும் பொறுப்பில்லாத
கருத்துக்களை வெளியிடுவதும், போராட்டங்களை திட்டமிடுவதுமாகவும் இருக்கிற மனிதர்களுக்கு, இந்த
(எழுத்து மற்றும் பேச்சு) சுதந்திரம் வழங்கப்படுவது அவசியமானது தானா? இவர்களின் இந்த உரிமைகள்,
ஒரு மன நோயாளியின் கையில் இருக்கிற கூர்ந்த ஆயுதங்களாக அல்லவா தெரிகின்றன! அப்படியென்றால்,
இவர்களின் உரிமைகளைப் பிடுங்குவதில் தப்பென்ன? இந்த தனி நபர் உரிமைகளை அனுபவிக்க, குறைந்த பட்ச
தகுதிகள் என்று எதையாவது அறிமுகப்படுத்தலாமா?

3:29 PM  
Anonymous Anonymous said...

இந்த இதழ் ரொம்ப அட்டகாசமா இருக்கு. தூள் கிளப்பிட்டீங்க. நம்ம கிருஷ்ணாவைப் பத்தின பேட்டி எத்தனையோ பெற்றோருக்கு
பயனாக இருக்கும்.

எல்லாருமே ரொம்ப நல்லா எழுதி இருக்காங்க. எதைச் சொல்ல ,எதை விட?

வாழ்த்து(க்)கள் அருணா.

என்றும் அன்புடன்,
துளசி.

6:41 AM  
Anonymous Anonymous said...

your thisaigal august issue is commendable. I particularly liked the article on autism. It will serve a courageous example for others.

Jegadeesan

8:12 AM  
Anonymous Anonymous said...

As a young mother who resigned my job recently, I liked the short story வண்ணப்பார்வை. I was able to relate to it a great deal. It's always a dilemma for women.

Aiswarya Mukunth

4:10 AM  
Anonymous Anonymous said...

ஏன் வேண்டும் சுதந்திரத்திருநாள்?

ஆகஸ்டு 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய நாட்களில் பள்ளிஇ கல்லூரிகளில் கொடியேற்றிக் கொண்டாடுகிறோம். அம்மூவண்ணக் கொடிக்குக் கொடுக்கின்ற மரியாதையைஇ இந்த தேசத்துக்குக் கொடுக்கின்றோமா? ஆர்.டி.ஓ அலுவலகத்துக்குச் சென்றுஇ முறையான விண்ணப்பம் வாங்கிஇ நிரப்பிஇ விண்ணப்பித்துஇ ஓட்டுநர் உரிமம் பெறக் காத்திருப்பவன் கோமாளி நம் தேசத்தில்! ஆனால் அங்கு செல்லாமலேஇ தரகர் மூலமாகஇ அதைப் பெற்றுக் கொள்பவன் புத்திசாலி. நீ தேசக்கொடிக்கு செலுத்துகின்ற மரியாதையை விடஇ லஞ்சம் கொடுக்காதிருப்பதுதான் உண்மையான சுதந்திரத்திருநாள். ஆர்.டி.ஓ அலுவலகத்தில் மட்டுமல்ல.... தாலுகா அலுவலகம்இ காவல் நிலையம்இ வருவாய்த்துறை அலுவலகம்இ இப்படி எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் நமக்குத் தேவையானவற்றை முறையாகப் பெறுவதற்குஇ அதற்கென்று பிரத்யேகமாக செயல்படும் தரகர்களின் உதவியைத்தான் நாட வேண்டியிருக்கிறது. இல்லையென்று யாரேனும் மறுக்க இயலுமா? சோம்பேறித்தனம் மக்களை முட்டாளாக்கிஇ அடிமையாக்குவதற்குப் பெயர்தான் சுதந்திர தேசமா?

சமீபத்தில் ஓர் திரைப்படம் காண நேர்ந்தது. (பெயர் நினைவில்லை) சத்யராஜிடம் சுதந்திரம் பற்றி ஓர் பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர் கொடுக்கும் பதில் சரியான நெத்தியடி. “சுதந்திர தினக் கொடியையே நம் பிரதமர் குண்டு துளைக்கா மேடையில் நின்றுதானே ஏற்றுகிறார்?” சுதந்திரம் பற்றி எல்லாரும் வாய் கிழியப் பேசுவதோடு சரி. நாட்டுப் பற்றைத் திரைப்படங்களிலும்இ கவிதைகளிலும் காண்பிப்பதோடு சரி. அத்திரைப்படங்கள் முறையாக வெளிவந்திருக்குமா என்று ஆராய்ந்தால் அதன் முடிவு வேறுவிதமாகத்தான் இருக்கும். லஞ்சம் கொடுப்பது தவறு என்று சுட்டிக்காட்டுகின்ற திரைப்படம்இ லஞ்சம் கொடுக்காது வெளிவர இயலுமா?

அரசியல்வாதிகளுக்கும்இ உயர்மட்ட அரசு அதிகாரிகளுக்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு. ஏரோட்டும் உழவனுக்கும்இ ஏழைத்தொழிலாளிக்கும் யார்தான் பாதுகாப்பு? மகாத்மா ஒருமுறைஇ “எப்போது ஒரு பெண் தன்னந்தனியாக நள்ளிரவு வேளை சாலையில் நடந்து செல்கிறாளோஇ அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்து விட்டதாகக் கூறமுடியும்” என்றார். பெண்ணும் வேண்டாம். நள்ளிரவும் வேண்டாம். உயர் மட்ட ஆண் அரசியல்வாதிகளுக்கு ஓர் சவால். உங்களால் பட்டப்பகலில்இ எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாது 1 மணி நேரம் (அது கூட வேண்டாம். ஒரு 15 நிமிடங்கள்) தனியாக சாலையோரம் நடந்து செல்ல இயலுமா?

தேசியச் சின்னங்களுக்குக் கொடுக்கின்ற மரியாதையைஇ யாருக்கென்று பணிபுரிகிறீர்களோ அம்மக்களுக்குக் கொடுங்கள். அன்று கொண்டாடலாம் உண்மையான ஆகஸ்டு 15ஐ.

- மு. கந்தசாமி நாகராஜன்

3:58 AM  

Post a Comment

<< Home