Friday, March 03, 2006

திசைகள் மார்ச் இதழில்

குடும்பங்களில், வேலை செய்யும் இடங்களில், சமுதாய அமைப்புக்களில், பொது இடங்களில் என்று பல கோணங்களில் பெண்களின் நிலையை அலசுகிறார்கள் திசைகளின் மார்ச் மாத எழுத்தாளர்கள்: ஆமீரகத்திலிருந்து ராமச்சந்திரன் உஷா, அமெரிக்காவிலிருந்து பத்மா அரவிந்த், சென்னையிலிருந்து ஜானகி ராஜகோபாலன், டாக்டர் சாந்தா நாராயணன், மற்றும் மதுமிதா.

இவர்களுடன், கீதா, ஜெயந்தி மற்றும் கவிநயா, சிறுகதைகளோடும், சுப்ரபாரதி மணியன் சினிமா பற்றிய ஒரு அலசலுடனும், கற்பகம், மதுமிதா, நிர்மலா மற்றும் விஜய்கங்கா தங்கள் கவிதைகளோடும் உங்களைச் சந்திக்கின்றனர்.
தவிர, பவித்ரா சீனிவாசன் புதுடில்லியில் கதா புத்தக வெளியீட்டாரின் உத்சவம் பற்றிய தன் அனுபங்களையும், அங்கே பங்குபெற்ற தமிழ் புத்தகங்கள் பற்றியும், மொழிபெயர்ப்பு கலையைப் பற்றி அங்கே நடந்த அலசல்களையும் பகிர்ந்து கொள்கிறார் ( கொசுறாக, அங்கே தான் பார்த்த ஒரு சினிமா விமரிசனத்தையும் சேர்த்து)

இந்த இதழின் போதி மர சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்பவர் கொரியாவிலிருந்து கண்ணன்.

0 Comments:

Post a Comment

<< Home