Wednesday, May 31, 2006

ஜூன் மாத திசைகளில்...

திசைகள் ஜுன் இதழ் வெளி வந்துவிட்டது.


இந்த இதழின் எழுத்தாளர்கள், தங்கள் அனுபங்களை - மாட்டு வண்டிப் பயணம், மிதி வண்டிப் பயணம், விமானப் பயணம் என்று பலவித வர்ண ஜாலங்களாக அள்ளித் தெளித்துள்ளார்கள்.

ரோமாபுரியில் காணாமல் போன சித்தார்த் பற்றி நியுசிலாந்திலிருந்து துளசி கோபால், பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு அலுவலராக பூடானில் வாழ்ந்த அனுபவத்தை இன்று மதுரையிலிருந்து அலசும் ஏ. ஜெகதீசன், இன்று அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு அந்தக் காலத்தில் மாட்டுவண்டியில் சென்ற பயணங்களை மனசில் ஏக்கத்துடன் நினைவு கூறும் செல்வநாயகி, அமெரிக்காவில் தான் சென்ற ஒரு மிதிவண்டி பயணத்தைப் பற்றி செல்வராஜ், ஜப்பான் பயண விவரங்களைக் கூறும் மாதங்கி, சிட்னியிலிருந்து ஊர்ப்பக்கம் போக வேண்டுமென்று பலமுறை முயன்றும் தன் ஆசை இன்னும் தள்ளிப்போவதை நகைச்சுவையுடன் பகிர்ந்து கொள்ளும் ஷ்ரேயா, எல்லா அமெரிக்க நகரமும் ஒரே மாதிரிதான் என்றாலும் பாஸ்டன் நகர் ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று ஒரு சுற்றுலா சவாரி அழைத்துச் செல்லும் பாஸ்டன் பாலா என்று பலவித பயணங்களுடன் ஒரு விருந்தே உள்ளே காத்துக்கொண்டுள்ளது. உல்லாசமான விவரங்களுக்கிடையே, சென்னை மென்பொருளாளர், ஜெ. ராம்கி சுனாமிக்கு பின் பூம்புகார் சென்று வந்து அங்குள்ள நிலைமையை நெகிழ்வுடன் விவரிக்கிறார்.

இவர்களுடன் பவித்ரா ஸ்ரீனிவாசனும் கிரிதரனும் அண்டை அயல் பகுதியில் மொழிபெயர்ப்புகளுடனும், கவிநயா, ஜெயந்தி சங்கர் மற்றும் விழியன், சிறுகதைகளுடனும், இளந்திரையன், மதுமிதா, சேவியர், சந்துரு இவர்கள் கவிதைகளுடனும், வாழ்க்கை பகுதியில் கொரியாவிலிருந்து கண்ணன், கொரிய, இந்தியத் தொடர்பு பற்றியும் இந்த இதழில் பங்களிக்கிறார்கள். புத்தகம் பகுதியில் "தண்ணீர் யாருக்குச் சொந்தம்" என்ற பால் பாஸ்கர் புத்தகம் ஒன்றை அலசுகிறார் சுப்பிரபாரதி மணியன். போதி மரச் சிந்தனையை அளிப்பது கீதா அர்ஜுன், சென்னை மருத்துவர் - ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்ட எண்ணங்கள்.

சிறந்த வாசிப்பு அனுபவத்தை இது உங்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களையும் விவாதங்களையும் "திசைகள் அரங்கில்" வரவேற்கிறோம்.

அன்புடன்
அருணா ஸ்ரீனிவாசன்

10 Comments:

Anonymous Anonymous said...

Aruna,

I saw the published article "Vindhaiyana Yathrigargal".Thanks for publishing it. In the article , I found some letters are missing.
Request you to verify the same.

Thanks
Giridharan

9:24 PM  
Blogger Thisaigal said...

திருத்தப்பட்டுவிட்டது கிரிதரன்.

12:36 AM  
Blogger துளசி கோபால் said...

இதழ் நன்றாக வந்துள்ளது அருணா.

வாழ்த்து(க்)களும், நன்றியும்.

1:40 AM  
Anonymous Anonymous said...

Thanks a lot.

6:21 AM  
Blogger Thekkikattan|தெகா said...

செல்வநாயகி எழுதிய *நான் ரசித்த பயணம்* என்ற கட்டுரையை வாசிக்க வாசிக்க என் வாழ்க்கை பின்னோக்கி பயணித்ததை உணர முடிந்தது. எந்த அளவிற்கு அந்த கடந்த கால நினைவுகள் நெஞ்சிலே தைத்துப் போயிருந்தால் காலச் சுவடுகள் அவ் நினைவுச் சுவட்டினை தீண்ட முடியாமல் போயிருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

செல்வநாயகி சிறிது நாட்களுக்கு முன்பு தமிழ்மணத்தில் ஒரு கேள்வி ஒன்றை முன் வைந்திருந்தார் - அது புலம் பெயர்வதால் நமக்கு ஏற்படுவது இழப்பா அல்லது சேர்ப்பா என்று. அதற்கு அங்கு அவருக்கு கொஞ்சம் சூசகமாக எனக்குப் பட்டதை பகிர்ந்திருந்தேன். அதற்கு அவர் ஒன்றும் பிடிபடாமல் கொஞ்சம் விளக்கச் சொல்லியிருந்தார்.

அவ்வாறு என்னால் செய்ய முடியவில்லை எனினும் இதோ அதற்கு விடை அவரே கொடுத்திருக்கிறார், இந்த கட்டுரையின் மூலம். இதே தான் நான் சொல்ல வந்திருந்தது. இழப்பே தான். இவ் அனுபவ மூடைகள் ஒரு பொக்கிஷம் எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் திரும்ப பெறமுடியாதது. நமக்கு மீண்டும் இதே மாட்டு வண்டிச் சவாரி கிடைத்தாலும், அந்த அனுவத்துடன் புது கண்டோட்டத்துடன் ஒப்பிட முடியாது, காரணம் புது விசயசங்கள் நம்மூள் நிறைய அழுக்கு மூடைகளை அடுக்கி வைத்து விட்டது. இழப்பு, Sometime ignorant is bliss!

தெக்கிக்காட்டான்.

2:30 PM  
Anonymous Anonymous said...

Hello Sir,


I would like to appreciate your efforts to bring in Thisaigal every month with fresh and meaningful articles. I am one of the thousand readers of Thisaigal; so I am not a special person. Just wanted to conratulate your effort and wishing Thisaigal for a very successful future.

With wishes,
Kanthan.

9:49 PM  
Blogger செல்வநாயகி said...

தெக்கிக்காட்டான்,

வாசிப்பின் பின்னான, நேரம் செலவழித்துப் பதிந்த உங்கள் நீண்ட மறுமொழிக்கு மிக்க நன்றி. என் பதிவின் இடுகைக்கான உங்கள் மறுமொழியை மேலெடுத்து மீண்டும் விளக்கியதற்கும்.

அருணா,
திசைகளை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. மேலோட்டமாக மேய்ந்ததில் வடிவமைப்பும், ஆக்கங்களின் தேர்வும் பிடித்திருந்தன. படித்துவிட்டு எழுதுகிறேன்.

10:26 PM  
Anonymous Anonymous said...

The answer to the poser I had made in my article in the May issue

http://www.thisaigal.com/may06/pushpavanam.html

is
this:

There is no such thing as Freedom of the
Press.The media would like to make a holy cow out of
it. There is no mention of it anywhere in the
Constitution.

Well,what applies to everybody applies to the press
also. (ie.)Freedom of Expression. In fact if they
respect freedom of expression, they must provide
adequate space for the other view. But they rarely do.

best wishes,
S.Pushpavanam
2/6/06

8:52 AM  
Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

திசைகளில் முதல்முறையாய் எனது கட்டுரை என்று பிரசுரமானதற்கு மகிழ்ச்சி. நன்றி. பயணக் கட்டுரைகள் அனைத்தும் சுவாரசியம்.

செல்வநாயகி, உங்கள் மாட்டுவண்டிப் பயணம் மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் அளவுக்கு அதில் ஊறித் திளைத்திராவிட்டாலும், நானும் சில மாட்டு வண்டிகளில் சென்றிருக்கிறேன். இதே போல் இரவில் கோயிலுக்குச் சென்றதும், சூரைப் பழம் விட்டதும் ஒரு 'சாம்பிள்' போலவாவது சென்றிருக்கிறேன். இருந்தும் நீங்கள் சொன்ன விதமும், கவிநடையில் வழக்கம் போன்ற உங்கள் எழுத்துக்களும் அருமை.

10:50 AM  
Blogger செல்வநாயகி said...

சும்மாகவேனும் இருக்கட்டுமென நீண்ட காலமாக ஒரு அடையாளத்தின் வெளிப்பாடாக ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்த சவாரி வண்டி இந்தமுறை ஊருக்குப்போனபோது இல்லை. இடத்தை அடைக்கிறதென எங்கோ கடத்தப்பட்டுவிட்டது. அந்த நிமிடத்தில் ஏற்பட்ட வெறுமையொன்று மனதில் எங்கோ சுற்றிக்கொண்டிருந்துவிட்டு திசைகளுக்குப் பயணக்கட்டுரை எழுதுகையில் வெளிவந்துவிட்டதென நினைக்கிறேன் செல்வராஜ். வேறு ஏதேதோ எழுதத் திட்டமிட்டுக்கொண்டிருந்துவிட்டு, தட்டச்சும் நிமிடத்தில் இதை எழுதத் தோன்றியது. உங்கள் வாசிப்புக்கும், மறுமொழிக்கும் நன்றி.

2:54 PM  

Post a Comment

<< Home