Friday, March 03, 2006

திசைகள் மார்ச் இதழில்

குடும்பங்களில், வேலை செய்யும் இடங்களில், சமுதாய அமைப்புக்களில், பொது இடங்களில் என்று பல கோணங்களில் பெண்களின் நிலையை அலசுகிறார்கள் திசைகளின் மார்ச் மாத எழுத்தாளர்கள்:

ஆமீரகத்திலிருந்து ராமச்சந்திரன் உஷா, அமெரிக்காவிலிருந்து
பத்மா அரவிந்த், சென்னையிலிருந்து ஜானகி ராஜகோபாலன்,
டாக்டர் சாந்தா நாராயணன், மற்றும் மதுமிதா.

இவர்களுடன், கீதா, ஜெயந்தி சங்கர் மற்றும் கவிநயா, சிறுகதைகளோடும்,
சுப்ரபாரதி மணியன் சினிமா பற்றிய ஒரு அலசலுடனும், கற்பகம் இளங்கோவன் , மதுமிதா, நிர்மலா மற்றும் விஜய்கங்கா தங்கள் கவிதைகளோடும் உங்களைச் சந்திக்கின்றனர்.

தவிர, பவித்ரா சீனிவாசன் புதுடில்லியில் கதா புத்தக வெளியீட்டாரின் உத்சவம் பற்றிய தன் அனுபங்களையும், அங்கே பங்குபெற்ற தமிழ் புத்தகங்கள் பற்றியும், மொழிபெயர்ப்பு கலையைப் பற்றி அங்கே நடந்த அலசல்களையும் பகிர்ந்து கொள்கிறார் ( கொசுறாக, அங்கே தான் பார்த்த ஒரு சினிமா விமரிசனத்தையும் சேர்த்து)

இந்த இதழின் போதி மர சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்பவர் கொரியாவிலிருந்து கண்ணன்.

10 Comments:

Anonymous Anonymous said...

Dear Editor,

Impressive logo & title Thisaigal.
Quality web magazine.Good idea to come up with women's issue.
Short story writer Jayanthi Shankar's story in this issue was intresting. Very happy to see only men writer Kannan.
Good job done Thisaigal. Keep it up.

Jayashree Suresh
Mumbai.

5:07 AM  
Anonymous Anonymous said...

I feel in the past few decades increasing globalisation / liberalisation has provided opportunities for the educated middle class women. Women are becoming increasingly visible and successful professionals.

But they constitute very miniscule percentage. In my opinion, to some extent, the glass ceiling is women’s own making also.

One, their parallel profession of running a home and family is posing a problem to take up more challenging assignments.

They compromise on their ability to prove at work. But they don’t want to compromise with their responsibilities of family.

Two, there is a lack of flexi time jobs. Work place should have more crèche facilities so that they could do their work in peace with the comfort that their kids are within their vicinity only.

Three, many women are inherently content with their lot.

I think these reasons constitute the glass ceiling.

Anandapriya

1:21 AM  
Anonymous Anonymous said...

திசைகள் அமர்க்களம்! முகப்பு படம் சூப்பர்! எங்கே பிடிச்சீங்க.
ரத்தினமான கவிதைகள். அதுவும் பட்டுப்பூச்சிகள் பற்றிய ஒன்று மனதை சிதைத்தது!


பிரியமுடன்.
கற்பகம் இளங்கோவன்.

6:18 AM  
Anonymous Anonymous said...

மார்ச் மாத இதழை படித்தேன் ரசித்தேன்.

அன்புடன்
கீதா

6:19 AM  
Anonymous Anonymous said...

இன்னிக்குத்தான் 'மார்ச் திசைகள்' பார்த்தேன். பெண்கள் சிறப்பிதழ் அட்டகாசமா செஞ்சுருக்கீங்க.

எது நல்லால்லேன்னு சொல்லலாமுன்னு துருவித்துருவிப் பார்த்தேன். தோல்விதான்:-)

கண்ணனோட 'பார்வை'தான் எனக்கும் நம்ம கோயில்களைப் பத்தி.

பவித்ராவோட கட்டுரை அருமை. நிறைய தெரிஞ்சுக்க முடிஞ்சது.

ஜானகி ராஜகோபாலன் தன்னம்பிக்கையை வளர்த்துட்டாங்க.

என்றும் அன்புடன்,
துளசி.

6:21 AM  
Anonymous Anonymous said...

திசைகள் மகளிர் சிறப்பிதழ் வாசித்தேன்! நமது நம்பிக்கையிலும் மதுமிதாவின் கட்டுரையை மேற்கோள் காட்டி யிருந்தேன். உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது.

பத்மா அரவிந்த் ஈகோ பற்றிய கருத்தும் அருமை. ஆனல் அது சில இடங்களில் அவசியம் தேவை. எதற்கும் ஒரு எல்லை உண்டுதான்.

மகிழ்ச்சி உங்கள் கையில்" ஆசிரியருக்கு எனது பாராட்டுகள்!

Regards,
PositiveRAMA

4:45 AM  
Anonymous Anonymous said...

I loved your editorial. I liked the article by Madhumita on Sarvadesa Magalir Dinam ( IWD)

The article is an interesting take on IWD's relevance and that it is not about the party hopping women of the rich elite, who grace Page 3 of newspapers in Delhi,
Bombay or Bangalore.

A few additions to women achievers list include Vanitha Rangaraju who is from Trichy and she won an Oscar for her technical work in the movie Shrek,
Sunitha Solomon for first diagnosing AIDS, Dr. Manorama who gave up her lucrative practice as a pediatric surgeon and instead has devoted her life to taking care of AIDS orphans -- all from TN and the list goes on.

Aanal, oray oru objection – Madhumita thanathu katturaiyil, oru pennin kudikara kanavanai yain thaan vivakaruthu seivathilalai endru nyayapaduthum vidhamakka ulluthu. Athavathu oru vivakaruthu aana penikku ooril matra aanpillaikal thonthravu seivarkal endru! Appadi endral, oru vidhavaikku enna paathukappu? Allathu endha kudikaran avalai bothayil kondral, aval enna seival? Ithu “Kallanalum Kannavan” endra kootril irunthu “Kudiaanalam Kanavan” endra mathri allava ullathu? Itharku pathilaka, ippadi thavikum pengaluku, pen uthavi kulkal, yenna seyamudiyum endru allava kooriyiruka vendum? Appadi kooriyiruthal, Sarvadesa Magalir Dinam eppadi innum Kamala pondra penngalukku oru thembu tharaum. Allathu Magalir kaaval nilayathai patri koori, Kamala pondravarkal , eppadi evarkalai annugi payan peralam endru koori iruka vendum.”


Pasted below is the link to the e-card, which I personally thought was inspirational

http://www.touchninspire.com/woman.html

Celebrate Women’s Day…Celebrate Life…

I've written something similar for Gurlz magazine published from Bombay called "The Right Lessons?" & "Myth to Reality" -- the first deals with the state of gender in our textbooks and how this reinforces stereotypes and the second article deals with the Wage question -- both published last year.

How does one subscribe to Thisaigal?

Deepa Kandaswamy
Moderator
NWMI (Netwrok of Women in Media, India) Yahoo group

11:05 AM  
Anonymous Anonymous said...

நல்லதொரு முயற்சி கலந்துரையாடலுக்கு நல்ல களம் அமைத்துக் கொடுத்துள்ளீர்கள்.
வாசித்து கலந்துரையாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.நன்றி.

அன்புடன்
மதுமிதா

10:50 PM  
Anonymous Anonymous said...

dear Deepa Kandaswamy

thanks a lot for your response.

தீபா

நானும் நீங்கள் கூறுவது போல் பெண்கள் நலன் கருதி அவர்களின் மேம்பாட்டிற்காக
பல விதங்களில் பணி செய்து வருகிறேன்.4 விவாகரத்துக்கு வந்த தம்பதிகள் இப்போது மகிழ்வாய் வாழ்கின்றனர்.
7 தற்கொலைகள் தடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த கட்டுரையில் கமலா குறித்து சொன்னது எல்லா பிரிவிலும் பெண்கள் மனநிலை ஒன்று போல் இல்லை.
பிரிவுகளில் மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் ஒவ்வொரு individual பெண்மணியும் கருத்துக்களில் வேறுபாடுடையவர்களாக உள்ளனர்.

அதனையே வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்று குறிப்பிட்டேன்.மேலும் சமுதாயத்தில் சில பாதுகாப்பின்மையினை அவர்களுக்கு தோதான வகையில் எதிர்கொள்ளவே விரும்புகின்றனர்.

கமலாவின்(பெயர் மாற்றி அளித்துள்ளேன்)குழந்தைகளுக்கு
நான் வீட்டுப்பாடம் சொல்லித்தருகிறேன்.இரண்டும் மணியான பெண்குழந்தைகள்.
பெரிய பெண் சொல்கிறாள்'நான் இங்கிலீஷ் ஸ்கூல்ல இப்ப படிக்கல மிஸ்.தமிழ் ஸ்கூலுக்கு மாத்திட்டாங்க' என்று.

நமது அளவுகோலும் சமூகரீதியாக,பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பெண்களுக்கான அளவுகோலும் வேறாக இருக்கின்றன .
யதார்த்தம் சுடுகிறது தீபா.
அதனை சொல்ல நினைத்து எழுதியது இது.எல்லோருக்கும் ஒரே விதிமுரைகள் ஒத்து வரவில்லை என்பது முகத்திலடிக்கும் உண்மை.
கொஞ்சம் வெளியே வந்து வீதியில் இறங்கி சிரமப்படும் பெண்களிடம் பழக நேர்கையில் என்ன ஒரு sophisticated life நமக்கு என்றே நினைக்கத் தோன்றுகிறது.
ரொமபவும் பாதுகாப்பாக வாழ்கிறோம் தீபா நாம்.
(மற்ற கடின உழைப்பினை,சிரமங்களை,குறிக்கோளின் வெற்றிக்காக மேர்கொள்லும் கஷ்டங்களை விடுத்து)
சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
எனது பதிவில் நண்பர் நடேசன் எழுதிய கமெண்ட் பாருங்கள்.

http://madhumithaa.blogspot.com/2006/03/blog-post.html

நடேசனும்,அவரது குழு உறுப்பினர்களும் எனது வலைப்பூவினைப் படித்து விவாதம் செய்பவர்கள்.

அன்புடன்
மதுமிதா

10:52 PM  
Anonymous Anonymous said...

நன்றி ராம்

சில தவிர்க்க முடியாத காரணங்களால் நெட்டிற்கு வர இயலவில்லை. 15 நாட்களுக்குள் வருவேன் என்று நினைக்கிறேன்.

அன்புடன்
மதுமிதா

10:53 PM  

Post a Comment

<< Home